எம் அருமை வினாயகா
கண்படுமே நின் கருணை
எழில் ஒழுகும் நின் கருமை
நின் சிலை இதுவோ நீயதுவோ என,
என் உடல் சிலிர்க்க வைப்பவனே!
உனை அறியேன்
சொல் எம் மீது என் தவறோ!
எம் மீது என் தவறோ!
உன்னை விட்டு
நீ உலாவும் வீதியை விட்டு
நீ தந்த வீட்டை விட்டு
எம்மை ஏன் ஒத்திவைத்தாய்?
எம் வீட்டில் குனிந்தே வெளியேறி
நின் வாசல் நுழைவோமே அது தவறோ!
என் பார்வையை எது தடுத்தும்
நின் கோபுரம் பறிக்கும்மே அது தவறோ!
எச்செயலும் செய்யும் முன்னே
நின் பெயர் சுழியில் தொடருமே அது தவறோ!!!
எத்திசையும் நின் உருவ பிரதி இருந்தும் அத்துனையும் நீ மட்டுமே தெரிவாயே
அது தவறோ!!!
அய்யா புரியாமல் நான் ஏதும் செய்திருப்பின்,
எமை பொருத்து ஏற்றுக்கொள்வாயா...
எம் தவற்றை மன்னித்து விடுவாய்யோ...
* பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் * பூ அழகு பூச்சரம் பேரழகு பூவை பார்பவன் நாரை பார்ப்பதில்லை மணம் பூ தந்தாலும் நார்யின்றி சரமாகும் பூ ஏது? அவள்யின்றி நான் ஒரு பொழுது!!!
Comments
Post a Comment