சூரியனை காந்தர்வ மணம் முடித்து
என்னுள் ஆவி சேர
கருவுற்றேன்
என் தேகம் கருப்பாவதை கண்டு
குழந்தை கருப்போ என்று அஞ்சினேன்
என்மனத்தில் இடியும் மின்ன
அச்சத்தைப்போக்கி
வெள்ளி நிறத்தில் மகள் பிறந்தாள்!!!
பூமியை அவள் நெருங்க சமுதாயம் அவளை அழுக்காக்க முயன்றது
எதையும் அனுபவம் தானே என்றாள்!!
அதற்க்கு அவளுக்கு கிடைத்தது எல்லாம் பட்டப்பெயரே!
அனைவரையும் உறங்கவைக்க பொழியும்போது
அவள் தூக்க மழை
பள்ளி விடுப்புக்கு பொழியும்போது
அவள் விடுப்பு மழை
வேலை நேரத்தில் பொழியும்போது
அவள் உழைப்பாளி மழை
வேலை முடிந்ததும் பொழியும்போது
அவள் முதலாளியின் மழை
பள்ளி விடுப்பில் பொழியும்போது
அவள் சோக மழை
குழந்தை பிறக்கும்போது பொழியும்போது
அவள் ஆசி மழை
வாழ்ந்தவர் போகையில் பொழியும்போது
அவள் புண்ணிய மழை
வரட்ச்சியை பார்த்து பொழியும்போது
அவள் தாக மழை
மழை பெரும்மழையாக பொழியும்போது
அவள் பய மழை
பெரும்மழை சீரீ பொழியும்
அவள் அகால மழை
உடல்நலம் குன்றியிருக்கையில் பொழியும்போது
அவள் துரோக மழை
குடும்பத்துடன் குதுகளிக்க பொழியும்போது
அவள் ஆனந்த மழை
அன்புக்குரியோர் நெருக்கத்தில் பொழியும்போது
அவள் காதல் மழை
அம்மா என்று கதறியவள்
தன் முடிவை கடலில் கரைந்தே தேடிக்கொண்டாள்
தாயே நான் மீண்டும் உன் கருவறைக்குள்
உன் ஊண்னாக
உயிராக மீண்டும்
அம்மா ❤❤❤
* பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் * பூ அழகு பூச்சரம் பேரழகு பூவை பார்பவன் நாரை பார்ப்பதில்லை மணம் பூ தந்தாலும் நார்யின்றி சரமாகும் பூ ஏது? அவள்யின்றி நான் ஒரு பொழுது!!!
Comments
Post a Comment