உலகாண்ட இனம்மடா
அறமோ இது அறமோ!!!
தண்ணீ கேட்டா தண்ணீய காட்டுறான்
கீழ தோண்ட எதையோ மூடுறான்
மாட்டுக்காக பேசினா மாட்டேன்னு போகிறான்
ரோட்டுக்கு பேசினா
தாம்பாட்டுக்கு போகிறான்
கழிவுக்கு கேட்டா கழத்தருத்து போடுறான்
மானியத்த கேட்டா மானபங்கம் பன்னுறான்
கதிர்வீச்சுன்னு சொன்னா
கல்வீச்சு செய்யறான்
இவன் செய்யுர அரசாங்கம்
எவன் பேச்சை கேக்குது?
முடமான தாய் நாடு
நடமாட துடிக்குது
செயலற்ற என் செயலே
நாசமாகும் என் வாழ்வே
வட்டம்மது எம் வாழ்கை
திட்டம்மது நாம் செய்வோமே
நான் சொல்ல நீ கேளு
உலகாண்ட இனம்மடா
நம் உலகாள விதி செய்வோம்
அரசாள நாம் முயல்வோம்
வெண்ணரசியளை நாம் முனைவோம்
நம் நாடு
நம் மக்கள்
நம் வரலாறு
நம் வாழ்வியல்
இவை போற்றும் அரசாக
நாம் அரசாண்டு காட்டுவோம் !!!
Comments
Post a Comment