யார் மலடு!
கருணை இல்லா மணமுடையவனா?
பாரபட்சம் காட்டும் புத்தியுடையவனா?
களங்கம் உள்ள இதயம் உள்ளவனா?
நேர்மை இல்லா உள்ளம் உடையவனா?
பயபக்தி இல்லா மனிதனா?
கடவுள் இல்லை என சொல்லும் மூடனா?
அழும் குழந்தையை தூக்கமருப்பவனா?
தூங்கும் குழந்தையை தட்டி விடுபவனா?
சக மனிதனின் பசியை தீர்க்காதவனா?
நண்பனின் கஷ்டத்தை தீர்க்க நினைக்காத நண்பனா?
ஆம் இவர்கள் தான் மலடு
அதை விடுத்து
குழந்தை இல்லா ஜீவனையும்?
கனி இல்லா மரத்தையும்?
மீன் இல்லா நீர்நிலையையும்?
இவர்களை
மலடு என்று சொல்லும் மனிதர்களே யோசியுங்கள் உங்களில் யார் மலடு என்று???
அவர்கள் தெய்வத்தின் சிருஷ்டி
கடவுளுக்கு வாரிசு தேவையில்லை
மலடு என்று சொல்லும் முன் மனிதர்களே யோசியுங்கள்!!!
Comments
Post a Comment