*என் அக்காம்மா*
நான் வருவேன்
என்று காத்திருந்தாள் என் தாய் பத்து மாதம்!
என் அக்காள் காத்திருந்தாள் பல வருசம்!!
பார்த்தாள்
பூரித்தாள்
அழுதாள்
ஆனந்தப்பட்டாள்!!!
மொழி தந்தாள்
நடை தந்தாள்
தன் உடை தந்தாள்
ஒழுக்கம் தந்தாள்
தலை கோதினாள்
தாலாட்டினாள்
பால் (சாதம்) ஊட்டினாள்
தவரை கண்டித்தாள்
எனையடித்து அவள் அழுவாள்
எனையே சிந்தித்தாள்
மணமாகி மனமில்லாமல்
எனை பிரிந்தாள் முதல்முறையாக!!
முதல் அக்கா எடுத்து போனாள் வீட்டின் பாதி
சந்தோஷத்தை சீதனமாக
மீதியை இளையவள்!!!
இழந்தது அது மட்டுமா?
பாவாடை தாவணியை!
செவ்வாய் வெள்ளி விரதத்தை!
இனிப்பு கோதுமை தோசையை!
சொய்யானை!
மிதி வண்டியில் அவளை கூட்டி செல்லுகையில் இவள் என் அக்கா என்ற கர்வத்தை!
எங்களை தொடரும் வீட்டோரம் சுற்றும் விடலைகளை!
அம்மா
அம்மா
எதை சொல்லுவது என்று என்னி நான் அழுது சாய்ந்தேன் ஈரமான சுவற்றில் செங்கல்லும் அழுதே சொன்னது
என் அவள்(கள்) தான் தன் தாய்யென்று!
அப்போதுதான் தெரிந்தது அவள் மனதால் தொடாதது எது இருக்க முடியும் என்று! அக்காள் எனக்கு மட்டும் தாய்யில்லை என்றும்...
எது எப்படியோ அவளது முதல் குழந்தை நான் தான்
அம்மா (அக்காமாள்) ....💞💞

Comments
Post a Comment